இலங்கையில் நூற்றுக்கு 12 வீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று

இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் சுமார் 12 சதவீதம் பேர் ஒமிக்ரோன் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்புத் பிரிவினரால் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்விற்கமைய,  12 சதவீதம் பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இந்நிலைமை ஒரு போதும் புறக்கணிக்கப்படக் கூடாது என  சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் பட்டுவன்துதாவ தெரிவித்துள்ளார். 

தீவிரமான சிக்கல்கள் அல்லது மரணம் ஏற்படும் அபாயம் இருப்பதால் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!