ஒரே வாரத்தில் 2 முறை லாட்டரியால் கோடிஸ்வரியான இளம்பெண்

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ரோசா டோமினிக் என்ற 19 வயது இளம்பெண் அரிசோனா மாகாணம் சென்று திரும்பி வரும்போது 5 டொலர் மதிப்புள்ள லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார்.
இதன் மூலம் 555,555 டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 3.58 கோடி) வெற்றி பெற்றார். மேலும் அடுத்த சில நாட்களில் தன் அதிர்ஷ்டத்தை சோதிப்பதற்காக மீண்டும் 5 டொலர் மதிப்புள்ள டிக்கெட் ஒன்றை வாங்கினார்.

இதில் மீண்டும் 1 லட்சம் டொலர் (ரூ. 64 லட்சம்) வெற்றி பெற்றார். இந்த பரிசுத்தொகையை வைத்து ஷொப்பிங் செய்யவும் புது கார்வாங்கவும் ரோசா திட்டமிட்டுள்ளாராம்.

லாட்டரி நிர்வாகம் இந்த டிக்கெட் எப்போது வாங்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை.

Tags: ,