நெருக்கடி நிலையில் இலங்கை! நாட்டை மீட்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அறிவிப்பு

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாட்டை காப்பாற்றுவதே தமது பொறுப்பு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) இதனைக் கூறினார்.

தமது கட்சி பல வருடங்களாக மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றியுள்ள காரணத்தினாலேயே மக்கள் தம்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!