டொனால்ட் ட்ரம்புடன், இணைந்து செயலாற்ற பிரான்ஸ் விருப்பம்:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், இணைந்து செயலாற்ற விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் லொசான்னில் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பிரான்ஸின் எழுச்சி நாளான பாஸ்டில் தினத்தில் பங்கேற்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது பிரான்ஸ் தலைநகர் பரிஸிற்கு விஜயம் மேற்கொள்ளும் ட்ரம்பை சந்திப்பதற்கு ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள கலந்துரையாடல் இரு நாடுகளுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராயப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே இரு நாடுகளுக்குமிடையிலான வேறுபாடுகளை புறந்தள்ளி இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ட்ரம்புடனான சந்திப்பின்போது, சிரியா மற்றும் லிபியாவில் தொடரும் நெருக்கடி மற்றும் ஆயுததாரிளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: