துப்பாக்கி சூடு பயிற்சியின்போது குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பலி!

தமிழகத்தில் துப்பாக்கி சூடு பயிற்சியின் போது குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சி.ஐ.எஸ்.எப் வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு பயிற்சி எடுத்தபோது, அவரது துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு புகழேந்தி என்ற 11 வயது சிறுவனின் தலையில் எதிர்பாரதவிதமாக பாய்ந்தது.
    
இதனால் குண்டடிபட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இடது தலையில் மிகவும் ஆழமாக துப்பாக்கி குண்டு புகுந்ததால் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!