குற்றச்சாட்டுகளாலேயே நீக்கப்பட்டார் சுசில்!

சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சரவை, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பல ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை விமர்சித்ததற்காக அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஏனைய அமைச்சர்களின் முறைப்பாடுகளை அடுத்து ஜனாதிபதி, பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்ததாக அமைச்சர் நாமல் மேலும் தெரிவித்தார்.
      

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!