இளைஞரின் உயிரை பறித்த செல்பி மோகம்!

பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் குமார். 21 வயதான இவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள் 8 பேருடன் சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில், திபெத் எல்லையோரம் உள்ள சிக்கிமின் லட்சங் மாவட்டத்தில் லட்சங் சூ என்ற ஆறு பாய்கிறது.

மலைப்பாங்கான பகுதியில் இயற்கை எழில் மிகுந்த சூழ்நிலையில் இந்த ஆறு பாய்ந்தோடுகிறது.
   
இந்த ஆற்றின் கரையில் நின்று சுற்றுலா பயணிகள் பலருன் செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல், அபிஷேக் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று காலை 7 மணியளவில் லட்சங் சூ ஆறு பாய்ந்தோடும் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு மலைப்பாங்கான பகுதியில் பாறை மீது ஏறி நின்ற அபிஷேக் ஆற்றின் கரையோரம் நின்றவாறு செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாறையில் இருந்து வழுக்கிய அபிஷேக் வேகமாக பாய்ந்தோடிய லட்சங் சூ ஆற்றிக்குள் விழுந்துள்ளார்.

ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அபிஷேக் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற அருகில் இருந்தோர் முயற்சித்தபோதும் ஆற்றில் அடித்து செல்லபட்டார்.

இந்த சம்பவம் குறித்து இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்புப்படை, போலீஸ், மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அபிஷேக்கை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மோசமான வானிலை காரணமாக மீட்புபணியில் இன்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பல மணி நேரம் ஆகியுள்ள நிலையில் இளைஞன் அபிஷேக் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

செல்பி போகத்தால் இளைஞன் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!