மொன்றியல் ஆற்றில் விழுந்து காணாமல் போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு!

கனடாவில் உள்ள பிராய்ரிஸ் ஆற்றில் விழுந்து காணாமல் போன தமிழ் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் Andrée-Anne Picard தெரிவித்துள்ளார். ஞாயிற்றுகிழமை காணாமல்போன அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனின் சடலமே இது என Montreal பொலிஸார் உறுதி செய்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் குறித்த உடலை இழுத்து எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 வயதுடைய நாகேஸ்வரா என்ற இளைஞர் வேகமாக நீர் செல்லும் ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகைப்படம் எடுக்கும் போதே அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். எனினும் அவருக்கு நீச்சல் தெரியாதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags: ,