இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பசில்

வெளி நாடுகளில் பெற்றுக் கொண்ட கடன்களை திரும்ப செலுத்துவது மட்டுமல்லாது, மக்களுக்கான நிவாரணங்களை வழங்குதல் என்பன உரிய முறையில் நடைபெறும் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இந்த வருடத்தில் இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்) கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில், எமது அரசாங்கத்தினால் குறித்த கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த முடியும். செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள் இதுவரையில் எவ்வித பிரச்சினையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளது, எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படுவோம்.

கடன் செலுத்தப்படும் அதேவேளை, மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!