பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டும் ஸ்ரீதேவியின் மாம் படம் எப்படி?

இந்தியாவின் தலைநகர் டில்லியில் அவ்வப்போது இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், அதில் ஈடுபடும் இரக்கமற்றோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் கொடூரங்களையும், சுட்டிக்காட்டும் விதமாக ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம் அமைந்துள்ளது, ஹிந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும் இந்த திரைப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கின்றார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார்.

மேலும் குறித்த படத்தின் கதைக் கரு பாசத்தின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைவதோடு. இதன் கதையினை பொறுத்தவரையில் தன் வயிற்றில் சுமக்காத மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கின்ற கும்பலை பழி வாங்கும் மேல்மட்ட குடும்ப தாயாக வரும் ஸ்ரீதேவி, அதன் மூலம் தனது மூத்தாரின் மகளுக்கு தன் தாய்மையை புரியவைக்கின்றார். இது தான் ‘மாம்’ படத்தின் அடிப்படை கதையாகவுள்ளது. குறித்த படத்தின் தொடரும் கதை, திரைப்படத்தின் காட்சிகள், என்று எல்லாமே மாம் படத்தை இரசிக்க வைப்பதாக இயக்குனர் ‘ரவி உத்யவார்’ தெரிவித்துள்ளார்

Tags: