ராஜித சேனாரத்னவிற்கு கோவிட் தொற்று உறுதி!

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது அவர் வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜித சேனாரத்னவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!