பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும்  கொள்கலன்களில் எதிர்வரும் ஏப்ரல்  மாதம் முதலாம் திகதிக்குள் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மதுபான போத்தல்கள் மற்றும் கொள்கலன்களில்   ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர்   கபில குமாரசிங்க  தெரிவித்துள்ளார். 

புதிய ஸ்டிக்கருடன் மதுபான போத்தல்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னதாக  சந்தையில் தற்போது காணப்படும் ஸ்டிக்கர்களுடனான மதுபான போத்தல்களை நிறைவு செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும்  குறிப்பிட்டுள்ளார். 

இதற்கென ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது அவசியமெனவும் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர்  கபில குமாரசிங்ஹ கூறியுள்ளார். 

சட்டவிரோத   மதுபான வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக  மதுவரி திணைக்களம்  சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!