கொரோனாவை தொடர்ந்து அமெரிக்காவுக்கு அடுத்த அச்சுறுத்தல்!

இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட புதிய வகை தொற்றான flurona தற்போது அமெரிக்காவில் பல மாகாணங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றும் தீவிர குளிர் ஜுரமும் கலந்து ஒரே நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு flurona என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் முதன்முதலில் காணப்பட்ட flurona பரவல் தற்போது, கொரோனா பரவலால் கதிகலங்கிப்போயுள்ள அமெரிக்காவில் வேகமெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
    
மிசிசிப்பி, வட கரோலினா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தற்போது பரவலாக flurona தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் உலகம் முழுவதும் 79 பேர்களுக்கு flurona பாதிப்பு முதன்முறையாக உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை பொறுத்தமட்டில் 2020 மற்றும் 2021ல் குளிர் காய்ச்சலுக்கு ஒரே ஒரு குழந்தை மட்டும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது. ஆனால் 2019 மற்றும் 2020ல் குளிர் காய்ச்சலுக்கு 199 குழந்தைகள் மரணமடைந்துள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டில் 144 குழந்தைகள் மரணமடைந்துள்ளது. டிசம்பர் 25 முடிய அந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் 5,000 பேர்கள் குளிர் காய்ச்சலுக்கு இலக்கானதாகவும் இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!