அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

அதிபர்  ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பான  சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஆசிரியர் கள் எதிர்நோக்கியுள்ள   சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் மாதம்  30  ஆம் திகதி  மற்றும் கடந்த  3  ஆம் திகதி  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய குறித்த  சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி   ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும்  வரும் வகையில்   தேசிய சம்பளம்  சம்பள ஆணைக்குழு மற்றும் நிதியமைச்சின் அனுமதியுடன்  சுற்றறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!