உணர்ச்சிமயமான காட்சிகளில் நடிக்க விரும்பும் காஜல்!

காஜல் அகர்வால் தான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களைவிட இனி நடிக்கும் படங்களில் உணர்ச்சிப்பூர்வமாக நடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவே இருக்கிறார். முன்பு பெரும்பாலான படங்களில் நாயகர்களின் காதலியாக வந்த காஜல் இப்போது, முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அஜித்துடன் நடிக்கும் ‘விவேகம்’ தெலுங்கில் ராணாவுடன் நடிக்கும் ‘நேனேராஜு நேனே மந்திரி’ படங்களில் 2 நாயகர்களின் மனைவியாகவும் நடிக்கிறார்.இதில் உணர்ச்சிமயமான காட்சிகளில் நடித்து திறமையை காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காஜல் தனது நண்பர்களிடம் இந்த புதிய பரிமாணத்தை சொல்லி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Tags: