மோடிக்கு அனுப்பும் ஆவணத்தில் மனோ, ஹக்கீம் தவிர ஏனையோர் கைச்சாத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தமிழ்பேசும் மக்களின் பொது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணத்தில், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகள் நேற்று ஒப்பமிட்டன.

கடந்த 21ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எப்.), என்.ஸ்ரீகாந்தா (தலைவர் – தமிழ்த் தேசியக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – ரெலோ), த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்) ஆகியோர் நேற்று ஒப்பமிட்டனர்.

மாவை சேனாதிராஜா (தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சி) இன்று அந்த ஆவணத்தில் ஒப்பமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!