தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி பேச்சுவார்த்தை – மத்திய அரசு!

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்கள் கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதில் 12 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
    
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் அந்த நாட்டு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக இந்த 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விரைவில் தமிழகம் அனுப்பி ைவப்பதற்கு தூதரகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.

மேலும் மீதமுள்ள 56 மீனவர்களையும் விடுவிப்பது தொடர்பாக இலங்கையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!