‘நான் சீக்கிரமே இறந்து விடுவேன்’ – எலும்பாக மாறி வரும் அமெரிக்க இளைஞரின் உருக்கமான பதிவு!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல எலும்பாக மாறி வருவது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருபவர் Joe Sooch(29). இவருக்கு 3 வயது ஆகும் போது அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அன்றில் இருந்து இன்று வரை சுமார் 26 ஆண்டுகளாக இந்த நோய் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகிறது.
    
மருத்துவ முறையில் இந்த நோயை Stone Man Syndrome என்று அழைக்கப்படுகின்றது. மரபணு பிரச்னையால் இந்த நோய் இவரை தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இதனால் இவரது சுமார் ஏறக்குறைய 95 சதவீதம் முடங்கியுள்ளதால் அடுத்தவரின் துணையை நாடியே வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இவரது வித்தியாசமான நோயை பற்றி அவரது யூடியூபில் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

இது குறித்து Joe Sooch கூறியதாவது, கை எலும்புகள் உடைந்தால் எப்படி வலி இருக்குமோ அதை நான் தினமும் அனுபவித்து வருகிறேன்.

எனது வலது கை எப்போதுமே தூக்கிய நிலையில் உள்ளது. இதுதான் நான் சீக்கிரமே இறந்து விடுவேன் என்பதை நினைவுபடுத்துகிறதாக மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!