EPF நிதியில் 530 கோடியை வீணடித்த அரசாங்கம்

ஊழியர் சேமலாப நிதியத்தில் 530 கோடி ரூபாவுக்கும்  அதிகமான நிதி பயனற்ற வேலைத்திட்டங்களுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கடந்த 2020 ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதியிலிருந்து முதலீட்டுக்காக செலவிடப்பட்டுள்ள 530 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியிலிருந்து திறைசேரிக்கு எந்தவிதமான  பிரதிலாபமும் கிடைக்கவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றிற்காக 30 கோடி ரூபா  முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் குறித்த நிறுவனத்தின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 500 கோடி ரூபா உணவக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு முதலீடு செய்யப்பட்ட நிலையில், இதுவரை குறித்த நிதிக்கான பிரதிலாபங்கள் கிடைக்கப்பெறவில்லை என கணக்காய்வாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!