மகிந்தவிற்கு கோட்டாபயவின் இரகசிய எச்சரிக்கை! எண்ணப்படும் நாட்கள்

இலங்கையின் அரசியலமைப்பில் 13வது திருத்தம் இருக்கின்றது. அதை நாங்கள் இந்தியாவின் தீர்வாக கருதவில்லை. அதை கருதவும் முடியாது ஆனால் அது தான் இலங்கை அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஒரே ஒரு அரசியல் பரவலாக்க சட்டம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

எமது ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்ததாவது, 

“13ஆவது திருத்தத்தை கூட நடைமுறைப்படுத்தாமல் இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் அதை தவிர்த்து கொண்டிருக்கின்றன.

அது மட்டும் அல்லாமல் இப்போது இருக்கக்கூடிய அரசாங்கம் அதில் இருக்கக்கூடிய மாகாணசபைக்கு உரிய அதிகாரங்களை எல்லாம் மீளப்பெற்றுக் கொண்டிருகின்றது.

இலங்கையில் யுத்தத்தை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியிருந்து. சர்வதேச சமூகமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

யுத்தம் முடிந்துவிட்டால் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதாக கூறினார்கள். அவ்வாறு சொல்லியும் எங்களுக்கு நியாயம் வழங்கப்பட வில்லை.

இலங்கை அரசாங்கம் இந்த 13ஐ கூட முற்படுத்த தயராயாகவில்லை என்பதை வெளிப்படுத்ததான் இந்தியப் பிரதமருக்கான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான  இந்த செயற்பாட்டை நாங்கள் ஆரம்பித்தோம்.

ஆனால் அதற்கு பிறகு கலந்துரையாடல் நீட்டுபோய், பல தடவைகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று பல ஆவணங்கள் பரிமாறப்பட்டு வட கிழக்கின் சமகால வரலாறு எல்லாம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அதே போன்றுதான் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வரலாறும் அதில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் மலையக மக்களின் வரலாறும், முஸ்லிம் மக்களின் வரலாறும் அவ்வாறு இணைத்து கொள்ளப்படுவதற்கு இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதில் முரண்பாடு ஏற்பட்ட காரணத்தில் தான் அதில் இருந்து விலகி தமிழ்தேசிய கட்சிகளுக்கு சுததந்திரமாக செயற்பட நாங்கள் இடமளித்து விட்டு வெளியில் இருந்து அதனை அவதானித்து கொண்டிருக்கின்றோம் எனவும் கூறினார்.”

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!