கொழும்பில் கரையொதுங்கிய 3 ஆண்களின் சடலங்கள்!

கொழும்பு – வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    
வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் நிர்வாணத்துடன் ஆணின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.மற்றைய சடலம் பம்பலப்பிட்டி மெரைன் டிரைவ் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு சடலங்களும் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை,பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. தெமட்டகொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!