குடும்ப விழா என்ற பெயரில் மனைவிகளை விற்று சம்பாதிக்கும் ஆண்கள்: திடுக்கிடும் சம்பவம்!

சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப் இன்டர்காம் குரூப் என ஏற்படுத்தி, அதன்மூலம் அறிமுகமாகும் நபர்களுக்கு தங்களது மனைவிகளை விபச்சாரத்துக்கு அனுப்பி தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியுள்ளார்.

இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையும் அந்த வாலிபர் தனது மனைவியை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துசென்று, அங்கு இருந்த மற்ற நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளார்.

அதற்கு அந்த பெண் மறுத்ததுடன் கோபத்துடன் வெளியேறி கருகச்சால் காவல் நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகார் கொடுத்தார். போலீசார் கணவரை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அந்த வாலிபர் அளித்த விவரங்கள் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

போலீசார் அந்த வாலிபரை தீவிர விசாரணை செய்ததில், நாங்கள் சமூக வலைத்தளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இந்த குரூப்பில் தற்போது 2000 பேர் அங்கத்தினராக செயல்பட்டு வருகிறார்கள்.

இங்கு நாங்கள் வாரத்திற்கு மூன்று நாள் ஏதாவது ஒரு நண்பர்கள் வீட்டில் குடும்ப விழா என்ற பெயரில் விருந்து ஏற்பாடு செய்வோம் அப்போது அந்த விழாவில் கலந்துகொள்ள ஏராளமான நண்பர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுப்போம்.

குறிப்பிட்ட நாளில் நடைபெறும் இந்த விழாவில் சுமார் நூற்றுக்கும் மேல் நண்பர்கள் கலந்து கொள்வார்கள். அங்கு நண்பர்களுக்கு மது,பிரியாணி என அனைத்து வகைகளையும் ஏற்பாடு செய்வோம். அப்போது அங்கு நாங்கள் அழைத்துச் சென்றுள்ள எங்களது மனைவிகளை அந்த நண்பர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் பரிப்பது வழக்கம்.

நிகழ்ச்சிகள் ஓட்டல், லாட்ஜ் என்ற இடங்களில் நடந்தால் மற்றவர்களுக்கும் போலீசாருக்கும் சந்தேகம் ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட நண்பர்களுடைய வீட்டை தேர்ந்தெடுப்பது வழக்கம். இதன் மூலம் எங்களுக்கு ஆயிரக்கணக்கான பணம் வருமானம் கிடைக்கிறது. அதன் மூலம் நாங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என அந்த வாலிபர் போலீசில் தெரிவித்தார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வாலிபரின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தபோது, அதில் 2 ஆயிரத்துக்கும் மேல் உறுப்பினர்கள் இருப்பது தெரியவந்தது.

கேரளாவில் ‘ஜோடி யை மாற்றி கொள்ளும் வாட்ஸ் அப் குழு இயங்குகிறது. சுமார் 1,000 ஆண்கள் தங்கள் மனைவிகளை உடலுறவுக்காக மாற்றிக் கொள்ள தயாராக உள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது.

ஒரு நபர் அந்த குரூப்பில் உள்ள வாலிபருக்கு போன் செய்து உனது மனைவியை அனுப்பி வை என வேண்டுதல் வைத்தால், அப்போது அவரின் மனைவி பிசியாக இருக்கும்போது, வேறு மனைவியை அழைத்து அனுப்பி வைப்பதும் இவர்களுடைய பழக்கம்.

விசாரணை நடத்தியதில், சில அரசு உயரதிகாரிகளும், தனியார் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்த குரூப்பில் அங்கத்தினர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இதையொட்டி வாலிபரை விசாரித்து, அதன் மூலம் மொத்தம் 7 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விசாரணையின் மூலம் பல ரகசியங்கள் வெளிவரும் என கோட்டையம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!