கனடாவில் கல்லூரி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்: பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவு!

கனடாவில் கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் ஒரு விடயம் மேற்கொள்ளப்படவுள்ளது. ரொறன்ரோவை சேர்ந்த கீன் மெக்கன்சி என்ற 18 வயது மாணவர் University of Guelphல் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
   
இந்த நிலையில் கடந்த மாதம் 26ஆம் திகதி நடந்த வாகன விபத்தில் மொத்தம் 8 பேர் காயமடைந்தனர்.

இதில் மெக்கன்சியும் ஒருவர் என்ற நிலையில் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் மெக்கன்சி சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மெக்கன்சி நினைவாக அவருக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று வளாகக் கொடிகள் கீழே இறக்கப்படும் என்று Guelph பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் நினைவாக அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!