சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள 71 புலிகளும் “பயங்கரவாதிகள்” அவர்களை விடுவிக்க முடியாது – விஜயதாச ராஜபக்ஷ:-

இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 71 பேரை எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாதென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள நீதியமைச்சர், “கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறுவது முற்றிலும் பொய்யான விடயம் எனத் தரிவித்துள்ளார்.

குறிப்பாக இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட, மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிகள் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் கடும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 71 பேர் மட்டுமே இன்னும் தடுப்பில் உள்ளனர். பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்கள், கொலைகள் புரிந்தவர்கள், மற்றும் பலதரப்பட்ட பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களே தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் “ பயங்கரவாதிகள்” அதனால் இவர்களை விடுவிக்க முடியாது என

இவர்களை மட்டும் எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாது. அவர்கள் பயங்கரவாதிகள்” எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Tags: , , ,