
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ (Maithripala Srisena), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ மீண்டும் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக தகவல்கள் கிடைத்திருந்தும், அதனை தடுக்க தவறிய, நாட்டில் இருக்கவில்லை எனக் கூறி தப்பிக்க முயற்சிக்கும் மைத்திரிபால சிறிசேன மீது நாட்டு மக்கள் மீண்டும் நம்பிக்கை வைப்பார்கள் என எதிர்பார்ப்பது கனவு.
ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டு பொலன்நறுவைக்கு வயலில் உழவு தொழில் செய்ய போவதாக கூறி 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். எனினும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தவறினார்.
மீண்டும் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என நினைப்பது கனவு. இப்படி தோல்வியடைந்த அரசியல்வாதிகளுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த அரசியல் தொடர்பும் அவசியமில்லை எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!