மின் விநியோகத் தடைக்கான காலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளாந்தம் ஒரு மணி நேர மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதற்கான கால அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டின் மின் விநியோகக் கட்டமைப்பு நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையான நாட்களில் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறை அல்லது மின் பிறப்பாக்கிகளில் சிக்கல் ஆகியன ஏற்படும் சந்தர்ப்பத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார சபை நிர்ப்பந்திக்கப்படும் பட்சத்தில் இந்த அட்டவணைக்கு அமையவே மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!