பிரதான கட்சிகளிலேயே கள்வர்கள் இருக்கின்றார்கள் – ரஞ்சன் ராமநாயக்க

பிரதான கட்சிகளிலேயே கள்வர்கள் இருக்கின்றார்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியனவற்றை சேர்ந்தவர்களே மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான கட்சிகளில் கள்வர்கள் இருக்கின்றார்கள் என தாம் அண்மையில் பாராளுமன்றில் ஆற்றிய உரையை நிரூபிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் தாம் ஆற்றிய உரை குறித்து பிரதமரும், ஜனாதிபதியும் தம்மிடம் வினவியதாகவும் தமது தலைவிதியை அவர்கள் நிர்ணயம் செய்யட்டும் என விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: ,