பசில் அறிவித்த நிவாரணப்பொதி தொடர்பில் சர்வதேசத்திலிருந்து வந்த எச்சரிக்கை!

இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொதி, இலங்கையின் நிதிச் சவாலை அதிகரிக்கக்கூடும் என சர்வதேச மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை எச்சரித்துள்ளது.

ஜனவரி 3 அன்று, இலங்கையின் நிதியமைச்சர் 229 பில்லியன் ரூபா மதிப்பிலான நிதி நிவாரணப் பொதியை அறிவித்தார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் அதிக நுகர்வோர் விலைகளின் தாக்கத்தை குறைப்பதற்காக இந்த நிவாரணம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், குறித்த நிதி ஒதுக்கீடுகள், நிதி மற்றும் கடன் ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா ஓமிக்ரான் மாறுபாட்டின் வெளிப்பாட்டுடன் இலங்கையில் நிதிச் சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதில் தொடரும் தாமதம் நிதி அழுத்தங்களை தீவிரப்படுத்தும் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!