புதிய சாதனை படைத்த சிபிராஜ்ஜின் சத்யா படம்!

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது நடித்து வரும் `சத்யா” படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

யோகி பாபு, சதீஷ் நடிப்பில் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். `சத்யா’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

`சத்யா’ ட்ரைலரை திரையுலக ஜாம்பவான்கள் பலரும் டுவிட்டரில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் வருகிற அகஸ்டு மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Tags: