கண்ணில் ஒட்டிக் கொண்ட 27 காண்டாக்ட் லென்சுகள்.. ஆபரேஷனில் அவதிப்பட்ட 67 வயது மூதாட்டி!

ஆபரேஷனில் 67 வயது மூதாட்டிக்கு, 27 காண்டாக்ட் லென்சுகள் ஒட்டிக் கொண்டதால் மிகுந்த அவதிக்கு ஆளானார்.

இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள சோலிஹுல் மருத்துவமனைக்கு 67 வயது மூதாட்டி சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அவர் கடந்த 35 ஆண்டுகளாக, கண்களில் காண்டாக்ட் லென்சுகள் பொருத்தி வருகிறார். அவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய லென்சுகள் ஆகும்.

இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக கண்ணில் உறுத்தல் ஏற்பட்டதாகவும், அதனால் தாங்க முடியாத வலி உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவரை சோதனை செய்த கண் மருத்துவர் ரூபல் மோர்ஜாரியா அதிர்ந்துள்ளார்.

அந்த மூதாட்டியின் கண்ணில் 17 காண்டாக்ட் லென்சுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு இருந்துள்ளன. மீண்டும் சோதனை நடத்தியதில் மேலும் 10 லென்சுகள் ஒட்டிக் கொண்டு காணப்பட்டன.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, லென்சுகள் அகற்றப்பட்டன. தற்போது அந்த மூதாட்டி, எந்தவித கண் பிரச்னையும் இன்றி காணப்படுவதாக கூறியுள்ளார்.

Tags: ,