
நாட்டின் பலபாகங்களில் இன்றும் மின் விநியோகத்தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை முன்னதாக தெரிவித்திருந்தது.
இதேவேளை களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் செயலிழந்துள்ள தனியார் மின் நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பலபாகங்களில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது.
இதன்படி வத்தளை, மாலபே, அக்குரஸ்ஸ, மஹரகம, நுகேகொடை, பொரலஸ்கமுவ, கல்கிசை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!