அரச வைத்தியசாலைகளில் மீண்டும் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

சுகாதார தொழில் வல்லுநர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து எதிர்வரும் 19 ஆம் திகதி பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக துணை சுகாதார தொழில் வல்லுநர்களின் கூட்டு சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி மேல் மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக இன்று முற்பகல் 7 மணி முதல் வட மத்திய மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தத்தின் எட்டாவது மாகாணமாக வட மத்திய மாகாண வைத்தியசாலைகளில் இவ்வாறு பணிப் புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியிலான பணிப் புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் துணை சுகாதார தொழில் வல்லுநர்களின் கூட்டு சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!