மனைவிகளை மாற்றி உல்லாசம்: சிக்கிய ஆயிரக்கணக்கான தம்பதிகள் – அதிரவைக்கும் சம்பவம்!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அதில், தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
    
இதனைத்தொடர்ந்து ஆலப்புழை, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முகநூல், டெலிகிராம் ஆகிய சமூக வலைத்தளம் மூலமாக ஒரு குழுவை ரகசியமாக தொடங்கி அந்த குழுவுக்கு ‘கப்பிள்ஸ் மீட்’ என்று பெயரிட்டுள்ளது தெரியவந்தது.

இந்த குழுவில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கணவர், மனைவி இருவரும் தங்களது விருப்பத்துடனும், கட்டாயத்தின் பேரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடுவார்கள். சிலநேரம் குழுவில் உள்ள உறுப்பினர்களின் வீடுகளிலும், உல்லாச விடுதிகளிலும் சந்தித்து மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிப்பதும் உண்டு.

சில நேரங்களில் ஒரு பெண் பல ஆண்களின் ஆசைக்கும், ஒரு ஆண் பல பெண்களின் ஆசைக்கும் இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கூறியதாவது:-
மனைவிகளை உல்லாசத்திற்கு மாற்றிக்கொள்ளும் கும்பலுடன் தொடர்புடைய 14 சமூகவலைத்தள குழுக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவில், கேரளா மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 1500 உறுப்பினர்கள் அதாவது 750 ஜோடிகள் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.

சாதாரண மன நிலையோடு இருப்பவர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் நிலைக்கு வர மாட்டார்கள். ஆதலால், இந்த கும்பல் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறதா? என்பது குறித்தும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முக்கிய புள்ளியை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கேரளாவில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் செயல்பட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!