லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி நீக்கம்

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோக தட்டுப்பாடு உட்பட நாடளாவிய ரீதியில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அண்மையில் பதிவு செய்யப்பட்டன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதனை தவிர்த்து செயற்பட்டுவருவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தெஷார ஜயசிங்கவின் வெற்றிடத்திற்கு ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முத்துராஜவெல பகுதியில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்போது அவசர கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!