
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர், சிறையில் மர்மமான முறையில் அப்பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திலும் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து 2019ம் ஆண்டு நடந்த கார் விபத்தில், குறித்த பெண்ணின் 2 உறவினர்கள் உயிரிழந்தனர், வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்திலும் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது, இதுதொடர்பான வழக்கு விசாரணையில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில்,
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 40 விழுக்காடு பெண்கள், 40 விழுக்காடு இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் தாயார் தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வன்கொடுமை அல்லது சித்ரவதைக்கு ஆளானோருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும். மக்கள் பிரச்சனைக்காக சண்டையிடும் வேட்பாளார்களை நாங்கள் தேர்தலில் நிறுத்துவோம்.
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்தை நோக்கி எங்களுடைய பிரச்சாரம் இருக்கும்.
வரலாற்று முக்கியதுவம் பெற்ற இந்த முயற்சியால், உத்தரபிரதேசத்தில் புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!