தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரமில்லை! – மைத்திரிபால சிறிசேன

பத்திரிகைகளை வாசிப்பதற்கோ அல்லது தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதற்கோ தமக்கு நேரமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதனால் வெளியேறலாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

நாமல் ராஜபக்ச தமது கட்சியை விமர்சனம் செய்தமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பத்திரகைகளை வாசிப்பதற்றோ அல்லது தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதற்கோ நேரம் இருப்பதில்லை எனவும் கடுமையான வேலைப்பளு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலைகளை முடித்துக் கொண்டு வீடு செல்லும் போது 10, 11 மணி ஆகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இரவு 10 மணிக்கே நித்திரைக்கு சென்று விடுவதாகவும், நாட்டில் அப்போது நடைபெற்ற சில விடயங்களை பத்திரிகை மூலம் அறிந்து கொண்டதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அசாங்கமொன்றை அமைப்பதற்கான இயலுமை உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!