ஒமிக்ரோன் தொடர்பில் மற்றுமொரு பரிசோதனை அறிக்கை இன்று வெளியீடு.

ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர்கள் குறித்த மற்றுமொரு பரிசோதனை அறிக்கை இன்று வௌியாகவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளரும் கலாநிதியுமான சந்திம ஜீவந்தர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்,

சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தமக்கு வழங்கப்பட்ட 182 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனை முடிவுகளே இன்று வௌியிடப்படவுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர  குறிப்பிட்டார்,

அத்துடன் குறித்த மாதிரிகளுள் பெரும்பாலானவை கட்டுநாயக்க ஆய்வகத்தலிருந்து கிடைக்கப்பெற்றவையாகும் என அவர் கூறினார்,.

ஒமிக்ரோன் தொற்றுடைய 40க்கு மேற்பட்டவர்கள் இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

எவ்வாறாயினும் நாட்டில் டெல்டா தொற்றாளர்களே அதிகம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!