
அவருக்கு இதுவரை அளிக்கப்பட்டிருந்த பதவிகள், பொறுப்புகள், பட்டங்கள் அனைத்தும் ராணியாரால் பறிக்கப்பட்டுள்ளது. இனி அவர் இளவரசர் என்றே அழைக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
மட்டுமின்றி தமது சட்டப் போராட்டத்திற்காக 6 மில்லியன் பவுண்டுகள் தொகையை தனியாக எதிர்கொள்ளும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார். மேலும், இளவரசர் என்ற பட்டத்தை ராணியார் பறித்துள்ள நிலையில்,
அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்கம் விலக்கிக்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், அல்லது அதற்குரிய தொகையை இளவரசர் ஆண்ட்ரூ செலுத்த நேரிடும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் பாதுகாப்பு அமைச்சர் Damian Hinds இந்த சிக்கலான விடயத்திற்கு நேரிடையாக பதிலளிக்காமல், நாட்டின் பாதுகாப்புத்துறைக்கும் பொலிசாருக்கும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பது தொடர்பில் தெளிவான புரிதல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டுமா என்ற கேள்வி இளவரசர் ஹரி- மேகன் தம்பதி விவகாரத்திலும் எழுந்தது.
அப்போது உள்விவகாரத்துறை மாநகர காவல்துறை ஊடாக தெளிவான முடிவை தங்களது இணைய பக்கத்தில் அறிவித்திருந்து. பிரித்தானியாவில் அவர்கள் இருக்கும் மட்டும், அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதே.
ஆனால், தமது பாதுகாப்புக்கான மொத்த செலவையும் தாமே செலுத்துவதாக இளவரசர் ஹரி ஊடகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தற்போது ஆண்ட்ரூ விவகாரத்திலும் அதே நிலை வரலாம் என்றே கூறப்படுகிறது.
ராணியாரின் மகன் என்றாலும், ஆண்ட்ரூ சொல்லிக்கொள்ளும் வகையில் சொத்துக்களுக்கு அதிபதியல்ல. துஸ்பிரயோக வழக்கில் அவருக்கு 6 மில்லியன் பவுண்டுகள் தேவை என்பதால் சுவிட்சர்லாந்தில் அவருக்கு சொந்தமான இல்லம் ஒன்றை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த வழக்கு மற்றும் தொடர் சிக்கல்களால் 61 வயதான இளவரசர் ஆண்ட்ரூவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்றே கூறப்படுகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!