கனேடிய நகரில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்: 18 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டெரிந்த தீப்பிழம்பு!

கனடாவின் Ottawa நகரில் தொடர்ச்சியாக வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ள நிலையில், கட்டிடம் ஒன்றில் பற்றிய தீ, 15 முதல் 18 மீற்றர் உயரத்துக்கு கொழுந்து விட்டெரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Ottawa நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Merivaleசாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் திடீரென தீப்பற்றியுள்ளது.
    
Ottawa மேயரான Jim Watson கூறியுள்ள தகவலின் அடிப்படையில், தீப்பற்றியது Eastway Tank Pump & Meter Ltd என்ற நிறுவனம் அமைந்துள்ள கட்டிடம் என தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம், பெரிய டேங்குகள் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்குகள் தயாரிக்கும் நிறுவனமாகும்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தீவிபத்தில் இதுவரை யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. சம்பவத்தை பார்த்தவர்கள், திடீரென மூன்று முறை வரை வெடிச்சத்தம் கேட்டதாகவும், 15 முதல் 18 மீற்றர் உயரம் வரை தீப்பிழம்புகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!