60 வயதிற்கு மேற்பட்டோருக்கு சுகாதார தரப்பு எச்சரிக்கை

60 வயதிற்கு மேற்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட தங்களது பெற்றோரை அருகிலுள்ள தடுப்பூசி மத்திய நிலையத்திற்கு அழைத்து சென்று தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒமிக்ரோன் புரள்விலிருந்து பெற்றோர்களை பாதுகாப்பதற்கான பிள்ளைகள் இந்த பணியினை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார மேட்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அத்துடன் தடுப்பூசி மத்திய நிலையங்களில் சன நெரிசல் அதிகமாக காணப்படும் பட்சத்தில் அதிகாரிகளிடம் அறிவித்துவிட்டு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார மேட்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!