வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

புனரமைப்பு பணிகள் காரணமாக  வடக்கு ரயில் மார்க்கத்தின்  சில ரயில்சேவைகள்   நிறுத்தப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது..

 இதன் காரணமாக   அநுராதபுரம் முதல் வவுனியா வரையிலான  ரயில்மார்க்கம்  எதிர்வரும் 6 மாதங்களுக்கு  மூடப்படவுள்ளதாக  ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 92 மில்லியன் அமெரிக்க டொலர்  நிதியில்  120 கிலோமீற்றர் நீளமான  ரயில்பாதை  அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 குறித்த ரயில் மார்க்கத்தில் தற்போது பயணிக்கும்  ரயில்கள்   மணித்தியாலத்திற்கு  80 கிலோமீற்றர்  வேகத்தில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

   இந்த நிலையில்  வடக்கு ரயில் மார்க்கத்தின்  மஹவ முதல் ஓமந்தை வரையான   பகுதி அபிவிருத்தி செய்யப்படும் பட்சத்தில் மணித்தியாலத்திற்கு  100 கிலோமீற்றர்  வேகத்தில்  ரயில்களை செயற்படுத்த முடியும்  எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!