
போட்டி நடைபெறும் பகுதிகளில் மீட்பு மற்றும் அவசர உதவிகளுக்காக தீயணைப்புதுறை, ரெட்கிராஸ் அமைப்பினர் பணியில் ஈடுபடுவர். போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர்.
வெற்றிபெறும் காளையர்கள், காளைகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், பைக், குக்கர், பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படும். அதே போல் மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தலா ஒரு தங்க காசு வழங்கப்பட உள்ளது.
போட்டியை காண்பதற்காக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் என இருவருக்கும் முதல்வர் சார்பாகவும், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ சார்பாகவும் இரண்டு கார்கள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!