இறந்ததாக கூறி அமெரிக்க போலீசாரை ஏமாற்றி வந்த நபர்: காட்டிக்கொடுத்த கொரோனா!

பிரித்தானியாவில் உயிரிழந்ததாக நம்பப்பட்ட குற்றவாளி கொரோனால் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க, தனது சொந்த மரணத்தை போலியாக உருவாக்கி அமெரிக்காவை விட்டு வெளியேறியதாக நம்பப்படும் அமெரிக்கர் ஒருவர், கடுமையான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ரோட் தீவு மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    
தி கார்டியனில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நிக்கோலஸ் அலவெர்டியன் (Nicholas Alahverdian) 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் Utah-வில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்டர்போலால் தேடப்பட்டவர்.

விசாரணையில், 34 வயதான அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர் போலி அடையாளத்தைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவர் சர்வதேச கைது வாரண்டின் பேரில் டிசம்பர் 13 அன்று கிளாஸ்கோவில் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர், நிக்கோலஸ் எட்வர்ட் ரோஸ்ஸி, நிக்கோலஸ் அலவெர்டியன் ரோஸி, நிக் ஆலன், நிக்கோலஸ் பிரவுன், ஆர்தர் பிரவுன் மற்றும் ஆர்தர் நைட் போன்ற பல்வேறு பெயர்களில் அவர் பல்வேறு இடங்களில், வெளிநாடுகளில் போலி அடையாளங்களைப் பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

2020-ல் வெளிவந்த அறிக்கைகளின்படி, நிக்கோலஸ் அலவெர்டியன் non-Hodgkin’s lymphoma நோயால் பாதிக்கப்பட்டார், மேலும் Everloved.com என்ற செய்தி வலைத்தளம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும், அவரது சாம்பல் கடலில் கரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

“நிக்கோலஸ் அலவெர்டியனின் வாழ்க்கைப் போர் பிப்ரவரி 29, 2020 அன்று முடிந்தது என்று ஒரு ஓன்லைன் இரங்கல் செய்தியம் வெளியாகியுள்ளது.

ஆனால் அவர், ரோட் தீவில் தங்கியிருந்தபோது அலவெர்டியன் போலி அடையாளத்தைப் பயன்படுத்தி உள்ளூர் அரசியலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

AP செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், கடந்த வியாழன் அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், Nicholas Alahverdian 21 வயது பெண்ணை 2008-ல் MySpace-ல் சந்தித்ததாகக் கூறுகிறது.

அல்வெர்டியன் நிக்கோலஸ் ரோஸ்ஸி என்ற பெயரைப் பயன்படுத்தியதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் ஒரு பெண் கூறினார்.

அவர் அப்பெண்ணுக்கு பணம் கொடுப்பதாக உறுதியளித்து, ஆனால் அதற்கு பதிலாக, அவர் தனது குடியிருப்பில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையில், அவரது வளர்ப்பு தந்தையை ஏமாற்றிய குற்றச்சாட்டில் FBI அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. இவ்வாறு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!