அரசை விமர்சிப்பது மிகப்பெரிய தவறு!

அரசுக்குள் இருந்து கொண்டு அரசை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு. அரசிலிருந்து வெளியேறி அரசை விமர்சிப்பதற்குக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
   
கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரால், நேற்று மாலை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“அரசில் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பது மேல் நோக்கிப் பார்த்து எச்சில் துப்புவதைப் போன்றது. அதேபோல் ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலுக்கு ஆயுள் குறைவு.

நான் 50 வருடங்களாக அரசியலில் அனுபவங்களைப் பெற்றுள்ளேன். எனினும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல் கொள்கைகளிலிருந்து விலகிச் சென்றதில்லை” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!