ஆட்டின் தலைக்கு பதிலாக இளைஞரின் தலையை வெட்டிய நபர்: விபரீதத்தில் முடிந்த நேர்த்திக்கடன்!

இந்தியாவின் ஆந்திரவில் மதுபோதையில், இருந்த ஒருவர் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்தவரின் தலையை வெட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    
இதன்போது கிராம மக்கள் அனைவரும் எல்லம்மா கோவிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை பலிகொடுத்தனர்.

இதன்போது பலிகொடுப்பதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞர் பிடித்துக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் மது அருந்தி முழு போதையில் இருந்து ஆடு வெட்டுபவர் ஒருவர் குறித்த இளைஞனின் தலையை வெட்டியுள்ளார்.

இதனையடுத்து படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!