ஊழியர் நட்டஈட்டு கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

1934 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க ஊழியர் நட்டஈட்டு கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, சட்ட வரைவாளரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதுடன், இதற்கான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், திருத்தப்பட்ட சட்ட மூலத்தின் ஊடாக உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்காலிக ஊனம் ஏற்பட்டால் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 5 ஆயிரத்து 500 ரூபாவில் இருந்து 47 ஆயிரத்து 500 அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!