சிறைச்சாலை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியில் எதிர்ப்பு

சிறைச்சாலை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியான மனித உரிமை அமைப்புக்களம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

கடந்த 2012ம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 27 பேர் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் இறுதியில் அப்போதைய சிறைச்சாலை அதிகாரி எமில் ரஞ்சன் லமாஹோவவிற்கு கடந்த 12ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்த தண்டனையானது சிறைச்சாலையின் மிக மோசமான நிலைமையை மூடி மறைப்பதற்கான முயற்சியாகவே நோக்கப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் 1976ம் ஆண்டின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்ற போதிலும் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 1284 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனையை ரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மரண தண்டனையை எதிர்க்கும் பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!