லண்டனில் பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்: எச்சரிக்கை பதிவு!

லண்டனில் இரண்டு பள்ளி சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய நபர் ஒரே ஆளாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். Greenwichல் கடந்த புதன்கிழமை பள்ளி சீருடையில் இருந்த 16 வயது மாணவி மீது மர்ம நபர் ஒருவர் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளான்.

இதற்கு அடுத்த நாளான வியாழன் அன்று 17 வயது மாணவியை நபர் ஒருவர் தாக்கி அவரிடமும் தவறாக நடந்திருக்கிறார்.
    
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பொலிஸ் அதிகாரி ஜியோப் வாரேன் கூறுகையில், இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட நபர் ஒரே ஆளாக இருக்கலாம் என தெரிகிறது.
நான் யாருக்கும் எச்சரிக்கையை ஏற்படுத்த விரும்பவில்லை என்றாலும், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இந்த சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

நம்முடைய குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய நியாயமான நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!