ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் கடமைகளை பொறுப்பேற்றார்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத்  தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில்  இன்று முற்பகல் 10 மணிக்கு அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த14 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி செனரத் அண்மையில் நியமிக்கப்பட்டார். 

பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதிவிவகித்த காலப்பகுதியில்   ஜனாதிபதியின் அலுவலக  தலைமை அதிகாரியாகவும்  காமினி செனரத் கடமையாற்றியுள்ளார்.

இதனிடையே,  1984 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட காமினி செனரத் , பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். 

இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க நாளைய தினம்  பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அநுர திஸாநாயக்க, , கல்வி அமைச்சு,   உட்பட பல்வேறு  அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!