மின்தடை குறித்து மின்சார சபையின் புதிய அறிவிப்பு

நாட்டில் இன்று மின்தடை அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதனால்   நேற்று நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.

நாட்டில்  நேற்று முதல்  4 கட்டங்களாக மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக  என இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.’

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதினால் இவ்வாறு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளது

இதன்படி 2.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடமும் இவ்வாறு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.

எனினும் தேவைக்கேற்ப  பிற்பகல் 2.30 முதல் பிற்பகல் 4. 15  வரையும்  அத்துடன்  பிற்பகல் 4.15 முதல்   பிற்பகல்  6 .00 மணிவரையும்  மேலும்’  பிற்பகல் 6.00  மணிமுதல் இரவு 7.45  வரையும்  அத்துடன் இரவு 7.45 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் 4 கட்டங்களாக  இவ்வாறு  மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக  இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!